Sports
"இந்திய வீரர்களை எங்களின் இந்த வீரர் நொறுக்கிவிட்டார்" -ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆணவப் பேச்சு !
நடந்து முடிந்த இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ச்சியாக நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்து இந்திய அணி சாதனைப் படைத்தது.
அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை சரிவில் இருந்து அணியை மீட்டது. அணி 83 ரன்களை எடுத்தபோது இந்த ஜோடி பிரிந்து ஹர்திக் பாண்டியா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்- ஜடேஜா இணை இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெறவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டணத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.
சுப்மன் கில்(0), ரோகித் சர்மா(13), சூரியகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) , ஹர்திக் பாண்டியா(1 ) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் கோலி, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் இரட்டை இலக்க ரன்களை எடுக்க இந்திய அணி ஒருவழியாக 100 ரன்களை கடந்து 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிச்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. இதனால் வெறும் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் குவித்த அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 37 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.
இந்த போட்டிக்கு பின்னர் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீபன் ஸ்மித், "சீக்கிரம் முடியும் இது போன்ற போட்டிகளை அடிக்கடி நம்மால் பார்க்க முடியாது. புதிய பந்தில் இந்திய வீரர்களை மிட்ச்சல் ஸ்டார்க் நொறுக்கியதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்த போட்டி எங்களுக்கு சிறந்த ஆரம்பமாக அமைந்தது.
இந்தியாவை பிரஷரில் வைத்தால் போதும் என்பதை மட்டுமே யோசித்தோம். தெளிவான திட்டத்துடன் களமிறங்கி அதை வெளிப்படுத்தியதால் இந்த போட்டியை எளிதாக வென்றுள்ளோம். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மீண்டும் அதிலிருந்து மீண்டு வந்து வென்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!