Sports
முடிவுக்கு வந்த தொடர் தோல்வி.. ஒருவழியாக மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு இந்தாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கி விளையாடி வருகின்றன.
இந்த தொடர் தற்போது முதல் பாதியை கடந்துள்ள நிலையில், லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மும்பை அணி 5 போட்டிகளில் 5 வெற்றிகளோடு முதல் இடத்தில் இருக்கும் நிலையில் டெல்லி அணி 4 வெற்றிகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி கிட்டத்தட்ட தொடரில் இருந்தே வெளியேறும் பரிதாப நிலையில் இருந்தது. இந்த நிலையில், நேற்று பெங்களூரு அணி உத்தர பிரதேச அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், உ.பி அணி களமிறங்கியது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 20 ஓவர் முடிவில் 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியில் கணிகா அஹுஜா அதிகபட்சமாக 46 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 4-ம் இடத்துக்கு முன்னேறியது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!