Sports
”குணமடையாத ஒரு வீரருக்கு ஃபிட்னஸ் சான்றிதழ் கொடுத்து ஏன்” -ஸ்ரேயாஸ் ஐயரால் BCCI-யில் ஏற்பட்ட குழப்பம் !
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி175/2 என்ற நிலையில் இருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்துகொள்ளப்பட்டது.
இதனால் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா கைப்பற்றி புதிய வரலாறும் படைத்துள்ளது. இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் மற்றும் 86 ரன்கள் விளாசிய அஸ்வின் , 135 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆகியோர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில் இந்தியா பேட்டிங் செய்தபோது புஜாரா ஆட்டமிழந்த பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா களமிறங்கினார். அதன் பின்னர் இறுதிவரை ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவில்லை. முதுகுவலி காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவில்லை என இந்திய அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
முதுகுப்பகுதியில் மிகவும் வலிக்கிறது என்றதால் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்கேன் செய்ய அழைத்துசெல்லப்பட்டார் என்றும், இதனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய அவர் வரவில்லை என்பதும் பின்னர் தெரியவந்தது. ஆனால் அவரின் இந்த காயம் தற்போது பிசிசிஐ வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுவலிப்பிரச்சினை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக ஓய்வில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர்,பெங்களூரு என்.சி.ஏ கொடுத்த சான்றிதலில் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்டில் மீண்டும் அணிக்கு திரும்பினார். ஆனால் மீண்டும் அவர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குணமடையாத ஒரு வீரருக்கு என்.சி.ஏ ஃபிட்னஸ் சான்றிதழ் கொடுத்து ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும் பும்ராவின் காயத்துக்கு என்.சி.ஏ விடைகொடுக்காத நிலையில், பும்ராவின் காயம் பெரிதாக என்.சி.ஏவே காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டது. இதனால் என்.சி.ஏ அதிகாரிகள் மீது பிசிசிஐ நிர்வாகம் கடும் கோவத்தில் இருப்பதாகவும், விரைவில் என்.சி.ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?