Sports

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா.. அது என்ன சாதனை தெரியுமா?

அதிரடி ஆட்டத்தால் எதிரி அணிகளை அச்சப்பட வைத்து வருபவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இந்திய அணியில் 2007ம் ஆண்டு அறிமுகமான இவர் முதலில் இப்படி அதிரடியாக ஆடவில்லை. மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத்தான் களத்தில் இறங்கி விளையாடுவார். இதற்குக் காரணம் அவர் இந்திய அணிக்குள் வந்தபோது சச்சின், வீரேந்திர சேவாக் போன்ற முன்னணி வீரர்கள் இருந்தனர்.

பின்னர் இவர்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெற் பிறகு இந்திய அணியின் தொடக்க வீரராகக் களம் இறங்கினார். அதன் பிறகு 'ரோஹித் சர்மா அடி எப்படி இருக்கும்' என்பதை ஒவ்வொரு போட்டியிலும் காட்டி வருகிறார். ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற அசைக்க முடியாத சாதனையைப் படைத்துள்ளார்.

ஒருகாலத்தில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது என்பது பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அதை அப்படியே தனது ஆட்டத்தால் மாற்றியவர் ரோஹித் சர்மா.

இப்படி ஒருநாள் போட்டியில் இவர் ஜாம்பவானாக இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் 2019ம் ஆண்டுதான் களமிறங்குகிறார். இந்தமுதல் போட்டியிலும் அதிரடியாகச் சதத்தை அடித்து தனக்கு 'பொறுமையாக விளையாட வராது' என டெஸ்ட் போட்டியிலேயே சொல்லி அடித்த கில்லி இந்த ரோஹித் சர்மா.

தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் 35 ரன்களை அடித்து சர்வதேச அளவில் 17000 ரன்களை கடந்த 7வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், சரவுவ் கங்குலி, எம்.எஸ்.தோனி ஆகியோர்17000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”அவருக்கு என்ன தெரியும்? அவர் கருத்த குப்பையில் போடுங்க..” -ரவி சாஸ்திரி கருத்துக்கு ரோகித் சர்மா பதிலடி!