Sports
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: செய்தி சேகரிக்க வந்த மூத்த பத்திரிகையாளர் ஹோட்டல் அறையில் மரணம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இரண்டு போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் மார்ச் 9ம் தேதி நடைபெறும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய வீரர்கள் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்போட்டியின் செய்திகளை சேகரிக்க இந்தூருக்கு பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையின் மூத்த செய்தியாளர் தினகரன் வந்துள்ளார்.
இவர் இந்தூரில் உள்ள ஒரு ஹேட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளார். மூன்றாவது டெஸ்போட்டி முடிந்ததை அடுத்து நான்காவது டெஸ்போட்டிக்காக அகமதாபாத்திற்கு இன்று அவர் புறப்பட வேண்டியிருந்தது.
ஆனால், இவரது அறை பல மணி நேரம் பூட்டியே இருந்ததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்றுபார்த்தபோது அவர் மயங்கிய நிலையிலிருந்துள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த தகவலை மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.தினகருக்கு சக பத்திரிக்கையாளர்களும், விளையாட்டு வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!