Sports
"இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாதான் முக்கிய காரணம்" -சுனில் கவாஸ்கர் விமர்சனம் !
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது
அதனைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்டிங் செய்தபோது 12 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் டெஸ்ட் தரவரிசையில் உலகின் முதல் இடத்தில் உள்ள லபுசனே களமிறங்கினார். ஆனால், ஜடேஜா வீசிய பந்தில் அவர் ரன் எடுக்காமல் ஸ்டம்பை பறிகொடுத்தார். ஆனால், இந்த பந்தை ஜடேஜா நோபாலாக வீசியதால் தப்பிய லபுசனே பின்னர் கவாஜாவுடன் இணைந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு 36 ரன்களும் விளாசினார்.
போட்டியின் இந்த கட்டத்தில் இருந்து இந்தியா அதன்பின்னர் மீளவேயில்லை. இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஜடேஜா வீசிய இந்த நோ பால் அமைய பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் அவரை விமர்சித்தனர். அந்த வகையில், இந்திய அணியின் இந்த தோல்விக்கு ஜடேஜா வீசிய நோபால்தான் மிக முக்கிய காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முதல் இன்னிங்சில் லபுசனே மற்றும் கவாஜா அமைத்த 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் முக்கிய காரணமாக அமைந்தது. . ஜடேஜா வீசிய லபுசனேவுக்கு வீசிய அந்த நோ-பால்தான் தோல்விக்கு வித்திட்டுள்ளது. அதன்பிறகு 2 ரிவியூக்களை தவறுதலாக எடுத்ததும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. நன்றாக செயல்படும் வீரர், சில நேரம் அழுத்தம் மற்றும் ஆர்வமிகுதியில் முட்டாள்தனங்களை செய்வது இந்திய அணியை மொத்தமாக பாதித்துவிடுகிறது" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!