Sports
ICC டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தில் அஸ்வின் அண்ணா.. 36 வயதிலும் சாதித்த சுழல் ஜாம்பவான் !
புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. அந்த போட்டியிலும் அதற்கு அடுத்த டெல்லி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்த இரு போட்டியிலும் இந்திய வீரர் அஸ்வின் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
இந்த தொடருக்கு முன்னரே ஆஸ்திரேலிய அணியின் முழு பயமும் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினின் மீதே இருக்கிறது என்பது அந்த அணியின் பேச்சின் மூலம் தெரியவந்தது. இதனால் அஸ்வினை சமாளிக்க அவரை போலவே பந்துவீசும் பரோடா ரஞ்சி அணிக்கு ஆடும் 21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரை வரவழைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்தும் அதனால் அவர்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தற்போது நடைபெறும் வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் 864 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே போல ஆல் ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து இரண்டாவது இடத்தில நீடிக்கிறார். முதல் இடத்துக்கு முன்னேறியுள்ள அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?