Sports
”நீ பொல்லார்ட் இல்லை.. விராட் கோலியை பார்த்தாவது கற்றுக்கொள்” -பாபர் அசாமுக்கு முன்னாள் வீரர் அறிவுரை !
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பவர் பாபர் அசாம். அந்நாட்டு அணியின் மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக இவரே இருந்து வருகிறார். மேலும், தற்போதைய காலத்தின் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடமும், ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்திலும், டி20 தரவரிசையில் மூன்றாம் இடத்திலும் உள்ளார். இவர் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கும், நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதி போட்டிக்கும் சென்றது.
இவர் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெசாவர் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இவரின் அணிக்கும் இஸ்லாமாபாத் அணியும் நேற்று முன்தினம் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெசாவர் அணி 20 ஓவர்களில் 156/8 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம்58 பந்துகளுக்கு 75 ரன் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் ஆடிய இஸ்லாமாபாத் அணி 14.5 ஓவரிலேயே அதிரடியாக செயல்பட்டு இலக்கை எட்டி அபார வெற்றிப்பட்டது. அந்த அணியில் தொடக்க வீரர் குர்பாஸ் 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி வெற்றிக்கு காரணமாக இருந்தார். இந்த தோல்வியைத் தொடர்ந்து பாபர் அசாம் மெதுவாக விளையாடியதே பெஷாவர் அணியின் தோல்விக்கு காரணம் என விமர்சனம் எழுந்தது.
மேலும் பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கும்போதும் மெதுவாக விளையாடி வருகிறார். அதுவே பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பல நேரங்களில் முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் விமர்சனம் தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடைசி நேரங்களில் 15, 20 ரன்களை எப்படி அடிக்கலாம் என்ற யுக்தியை இந்தியாவின் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு பாபர் அசாமுக்கு முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதில் பாபர் அசாம் முன்னேற வேண்டும். கைரன் பொல்லார்ட் போல உங்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை என்றாலும் உங்களது பலத்திற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். உலகத்தரம் வாய்ந்த வீரரான பாபர் அசாமால் அதை செய்ய முடியும்.
எடுத்துக்காட்டாக விராட் கோலி இறுதிகட்டத்தில் எடுத்த ரன்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி அதிரடியாக அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய வீரர் கிடையாது. ஆனால் அவரால் கடைசி ஓவரில் 15, 20 ரன்களை எளிதாக சேசிங் செய்ய முடியும். அவர் எப்போதும் களத்தில் இருக்கும் காலியான இடங்களை குறி வைத்து ரன்களை எடுக்கிறார். சூரியகுமார் யாதவும் அதே போன்ற செயல்பாடுகளை தான் வெளிப்படுத்துகிறார். எனவே அந்த யுக்தியை பாபர் அசாம் தனது பேட்டிங்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!