Sports
KL ராகுல் இந்திய அணியிலிருந்து நீக்கப்படவேண்டுமா? -செயற்கை நுண்ணறிவான ChatGPT அளித்த பதில் என்ன தெரியுமா?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் Chat GPT மென்பொருளை தனது தேடுதல் பொறியான BING-ல் இணைத்து லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் முயற்சித்து அதற்கான செயலில் இறங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வந்தபிறகு இது தேடுதல் வலைத்தளமாக உலகளவில் ஆதிக்கம் செல்லும் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டது.
இந்த Chat GPT மென்பொருள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறது. அதனிடம் பயனர் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல், டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு Chat GPT அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கேள்விக்கு Chat GPT அளித்த பதிலில், "தனிநபர்கள் மற்றும் அணிகள் குறித்து கருத்துகள் என்னிடம் இல்லை. ஆனாலும், அணியில் ஒரு வீரரை நீக்குவதற்கான பொது விதிகளை என்னால் சொல்ல முடியும். ஒரு வீரரின் அண்மைய செயல்பாடு, உடல்திறன் மற்றும் அவரது ஆட்டத்திறன் போன்றவை அணியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பதை பொறுத்தே அது அமையும்.
ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லையெனில் அணி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டு, மாற்று வீரரை ஆட வைக்கலாம். அவரது செயல்பாடு சிறப்பாக இருந்து, அது அணிக்கு முக்கியமானதாக இருந்தால் அணியில் தக்க வைக்கப்படலாம். அணித் தேர்வு என்பது ஒரு வீரரின் செயல்பாடு, உடல்திறன், யுக்தி மற்றும் சூழ்நிலைகளை பொருத்தும் அணி நிர்வாகம் மேற்கொள்ளும்" என்று கூறியுள்ளது.
Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!