Sports
"அவர்கள் தென்னிந்தியர்களை இந்தியர்களாவே பார்க்கவில்லை" -மும்பை வீரரை குறிப்பிட்டு முரளி விஜய் தாக்கு !
தமிழக வீரரான முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் சொதப்பினாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
அதிலும் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் அவர் பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால் தனது இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து சொதப்பிய அவர் பின்னர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் தொடங்கி நடைபெற்றது, இந்த போட்டியின் போது ரோகித் சர்மா சதமடித்ததும் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அரைசதத்தை சதமாக மாற்றும் வீரர்கள் பட்டியல் கட்டப்பட்டிருந்தது.அதில் 50 சதவீதத்தோடு ரோகித் சர்மா நான்காம் இடத்திலும், 60 சதவீதத்தோடு தமிழக வீரர் முரளி விஜய் முதல் இடத்தில் இடம்பெற்றிருந்தார்.
இதனைக் கண்டதும் கமெண்டரி பாக்ஸில் இருந்த மும்பையை சேர்ந்தவரும் முன்னாள் இந்திய வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 'ஆச்சரியம்' என கூறியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட முரளி விஜய் "சில முன்னாள் மும்பை வீரர்களால் என்றுமே தென்னிந்திய வீரர்களை புகழ்ந்து பேச முடியாது" என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு முரளி விஜய் பேட்டியளித்துள்ளார். அதில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முரளி விஜய் ,"ஒரு ரெக்கார்டு லிஸ்ட்டில் என் பெயர் முதலிடத்தில் இருப்பதைப் பார்த்து மஞ்ச்ரேக்கர் கமென்ட் அடித்தார். அதே நிறம் ரோகித் சர்மாவின் பெயர் அந்த இடத்தில் இருந்திருந்தால் ‘ஆச்சர்யமாக இருக்கிறதே' என கமென்ட் செய்திருப்பாரா? இதுவும் ஒரு அரசியல் விளையாட்டுதான்.
தென்னிந்தியர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கான பதிலடிதான் என்னுடைய அந்த ட்வீட். இப்படி கமென்ட்டெல்லாம் அடித்துவிட்டு அடுத்த நிகழ்ச்சியிலேயே அவர்தான் மீண்டும் கோட் சூட் போட்டுக் கொண்டு அமர்கிறார். அப்படியெனில், அவர்களெல்லாம் நம்மை இந்தியர்களாகவே பார்க்கவில்லையோ என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது. இப்படியான தாக்குதல்களுக்கு எதிராகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்" என காட்டமாக கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!