Sports
”KL ராகுல் பாத்ரூம் போய் அழவேண்டியதுதான்,அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு” -தினேஷ் கார்த்திக் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தை சேர்ந்த இவர் உள்நாட்டு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில், 20, ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 17, 1 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக இவரை ரசிகர்கள் கடுமையாக விமரசித்து வருகின்றனர்.
அவருக்கு பதில் சமீப காலமாக சிறப்பாக ஆடிவரும் கில், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3,4-வது டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டன் பதவியிலிருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டார். இதனால் அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”அடுத்த போட்டியில் இருந்து கே.எல். ராகுல் வெளியேற்றப்படுகிறார் என்றால் அது கடந்த போட்டியால் மட்டும் அல்ல, கடந்த ஐந்தாறு போட்டிகளில் அவர் செயல்பட்ட விதத்தினால்தான் என்பது அவருக்கும் தெரியும். அவர் எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் திறமையான பேட்ஸ்மேன். தற்பொழுது அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை என்பது பேட்டிங் டெக்னிக் சார்ந்தது அல்ல. இது மனநிலை சார்ந்தது. அவருக்கு தற்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது.
கிரிக்கெட் உலகில் இப்படியான சோகமான தருணங்களை நீங்கள் சமாளிக்க வேண்டும். இப்படியான சூழ்நிலையில் ட்ரெஸ்ஸிங் ரூம் டாய்லெட்டுக்கு சென்று இரண்டு கண்ணீர் துளிகளை விட்டு வெளியேறி வந்து செயல்பட வேண்டியதுதான். எனக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டு. ஆனால் ஒருபோதும் இது இனிமையான உணர்வு அல்ல. ஆனால் தற்போது நாம் அடுத்த போட்டிக்கு இளம் வீரர் கில்லுடன் செல்ல வேண்டும். அவர் சிறப்பாக விளையாடுகிறார். மூன்றாவது போட்டியில் ராகுலுக்கு பதில் ஒரு மாற்றம் இருக்கும். ஆனால் ஒன்று கே எல் ராகுல் வலிமையாக திரும்பி வருவார்” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !