Sports
காயத்திலிருந்து மீண்டு நேரடியாக IPL தொடரில் களமிறங்கும் பும்ரா.. விமர்சிக்கும் ரசிகர்கள்.. காரணம் என்ன ?
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா, தற்போது வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியைத் தழுவ அவரின் காயமும் ஒரு காரணமாக கூறப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பும்ரா களமிறங்கப்படுவார் என தகவல்கள் கசிந்த நிலையில், முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியதாக அறிவிக்கப்பட்டது.
அப்போதுக இந்திய அணி முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், பும்ரா இனி நேரடியாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தான் களமிறங்குவார் என வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பும்ரா இந்திய அணிக்காக அடிக்கடி காயம் அடைந்தாலும், ஐபிஎல் தொடரில் அவர் ஆடியபோது அவர் இதுவரை காயமடைந்து போட்டியில் பங்கேற்காமல் இருந்ததில்லை.
இதன் காரணமாக பும்ராவுக்கு நாட்டுக்காக ஆடுவதுதான் பிரச்சனை, அப்போது மட்டும் அவருக்கு காயம் ஏற்பட்டுவிடும். அதே நேரம் ஐபிஎல் என்றால் எந்த காயமாக இருந்தாலும் குணமடைந்து விடும் என ரசிகர்கள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பும்ரா ஐபிஎல் தொடரில் அறிமுகமானத்தில் இருந்து ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடாமல் இருந்துள்ளார் என புள்ளிவிவரத்தோடு அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!