Sports
ரோகித் சர்மா இன்னும் தனித்துவமாகவில்லை, இந்த விஷயத்தில் கோலியைதான் பின்பற்றுகிறார் -கம்பீர் கருத்து !
பல ஆண்டுகளாக இந்திய அணியின் தூணாக விளங்கும் விராட் கோலி தோனியின் ஓய்வுக்கு பிறகு 3 விதமாக போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தார். மேலும், வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், தனது அட்டாக்கிங் செயல்முறை காரணமாக வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடரை இந்தியாவால் வெல்ல முடியும் என்று நிரூபித்தார்.
வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்காமல் இந்தியா திணறிவந்த நிலையில், பும்ரா, சமி, சிராஜ் என வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணியையும் உருவாக்கினார். ஆனால், ஐசிசி கோப்பைகளில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது விராட் கோலியின் தலைமைக்கு பின்னடைவாக அமைந்தது.
அதோடு கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இழந்து தவித்து வந்தார். நிறைய அரைசதங்கள் அடித்தாலும் அதனை சதமாக மாற்றுவதில் தொடர்ந்து சோபித்த வந்தார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி சதமடித்திருந்தார். அது சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 70வது சதமாக பதிவாகியிருந்தது. அதன் பின்னர் நெருநாள் அவரின் சதம் வராமல் இருந்தது.
இது போன்ற காரணங்களில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இருந்து விராட் கோலியின் கேப்டன் பதவியை பிசிசிஐ பறித்து. இத தவற டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தே விராட் கோலியே விலகினார். அவருக்கு பதில் ரோஹித் சர்மா 3 விதமாக போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டைதான் ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பான பேசியுள்ள அவர், “ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் கேப்டன்ஷிப்பில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டைத்தான் பின்பற்றி வருகிறார். அவர் தனக்கென்று ஒரு தனி டெம்ப்ளேட்டை உருவாக்கவில்லை.
இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்திய விராட் கோலி, அஷ்வின், ஜடேஜாவை எப்படி அணிக்காகப் பயன்படுத்தினாரோ அதையேத்தான் ரோஹித் சர்மாவும் தற்போது பின்பற்றுகிறார். ஆனால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் கலந்துக்கொள்ளும் போதுதான் ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!