Sports
"இந்த IPL தொடரில் CSK-வை சமாளிப்பதே அனைவருக்கும் கஷ்டம்தான்" - கெளதம் கம்பீர் வெளிப்படை பேச்சு !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.
அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ம் தேதி நடக்கவுள்ளது. கொரோனா பாதிப்பு முடிவடைந்ததால் இந்த முறை ஐபிஎல் அணிகள் அதன் சொந்த மண்ணில் களமிறங்கவுள்ளன.
இந்த நிலையில், ஐபிஎல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய முன்னாள் வீரர் கெளதம் காம்பீர், "சென்னை அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடினால் அது சென்னை அணிக்கு எப்பொழுதுமே பலமான ஒன்றாகவே இருந்துள்ளது . சென்னை அணி தன்னுடைய சொந்த மைதானத்தை யாரும் அசைக்க முடியாத கோட்டையாகவே கட்டியமைத்துள்ளது.அங்கு எந்த அணி விளையாடினாலும் சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் சவாலான ஒன்றாகும்.சொந்த மைதானத்தில் அதிக போட்டிகள் வென்று விட்டால் வெளியே அதிக போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை,இதனால் சென்னை மைதானத்தில் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் சிக்கல் தான் " என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!