Sports
அப்பட்டமாக மீறப்பட்ட ICC விதி.. மூன்றாவது நடுவரால் பரிதாபமாக ஆட்டமிழந்த விராட் கோலி.. நடந்தது என்ன ?
புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி ஒரு கட்டத்தில் 91-1 என்ற நல்ல நிலையில் இருந்தது.
ஆனால், ஒரே ஓவரில் இந்திய வீரர் அஸ்வின் உலகின் நம்பர் 1 வீரர் லபுசேனையும் உலகின் நம்பர் 2 வீரர் ஸ்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எனினும் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் ஹன்ட்ஸ்காப் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த அணியை கோலி மற்றும் ஜடேஜா இணைந்து கொஞ்சம் மீட்டனர். ஆனால் மீண்டும் அடுத்தடுத்து இந்திய அணி விக்கட்டுகளை இழக்க 137- என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால், பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் -அஸ்வின் இணை 114 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இறுதியில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் விக்கெட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சளர் மேத்யூவ் குஹ்னெமேன் வீசிய பந்தை விராட் கோலி தடுத்தாடியபோது பேட்டிற்கும், கால்காப்புக்கும் இடையே ஒரே நேரத்தில் பந்து பட்டது. ஆனால் பந்து முதலில் பேடில் தான் பட்டது என கள நடுவர் அவுட் கொடுத்த நிலையில், கோலி உடனடியாக டி.ஆர்.எஸ் எடுத்தார். 3-வது நடுவரின் ஆய்வின் போதும் பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் கால்காப்பில் பட்டதாகத்தான் தெரிந்தது.
இதன் காரணமாக சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கள நடுவரின் முடிவை காரணமாக வைத்து 3-வது நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். இந்த விவகாரத்தில் ஐசிசி விதிமுறை அப்பட்டமாக மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஐசிசி விதி கிளாஸ் 36.2.2-ன் படி பந்து வீரரின் பேட்டிற்கும், கால்காப்புக்கும் இடையே ஒரே நேரத்தில் பட்டது போல தெரிந்தால், அதனை பேட்டில் பட்டதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அந்த விதிமுறையின் படி விராட் கோலிக்கு நாட் அவுட் என்றே கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது விராட் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!