Sports
"உலகக்கோப்பையை வெல்லும் முன் சச்சினுக்குள் இத்தனை பிரச்னைகளா ?" -முன்னாள் பயிற்சியாளர் பேட்டி !
இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றவர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். 16 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அதன் பின்னர் செய்தது எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.
அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள் என கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். அதோடு ஒரு நாள் போட்டியில் 200 அடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல் ஆளாக அதை கடந்து அனைத்தும் முடியும் என்று நிரூபித்தார்.
இத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், தற்போது மிகப்பெரிய அழுத்தத்தில் இருந்துள்ளது முன்னாள் பயிற்சியாளர் கேரி கிரீஸ்டனின் பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. சச்சின் குறித்து பேசிய அவர், நான் இந்திய அணியில் பயிற்சியாளராக சேர்ந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் அதிருப்தியான ஒரு மனநிலையில் இருந்தார். அவர் இந்திய அணிக்கு வழங்க வேண்டிய ஏராளமான பங்களிப்பு அவரிடம் இருந்தது. ஆனால் கிரிக்கெட்டை அந்த நேரத்தில் அவரால் ரசிக்க முடியவில்லை.
அந்த நேரத்தில் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை காண ஓய்வை பற்றி சிந்தித்து கொண்டு இருந்தார். இதன் காரணமாக அவரை அடிக்கடி தொடர்பு கொள்வதும் அவர் இந்திய அணிக்கு வழங்கப்பட வேண்டிய பாரிய பங்களிப்பை பற்றி அவருக்கு உணர்த்துவதும் எனக்கு முக்கியமானதாக இருந்தது. அவர் இந்திய அணிக்கு வழங்கிய பங்களிப்பை விட வழங்கப்பட வேண்டிய பங்களிப்பு அதிகமாக இருந்தது.
நான் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற சமயத்தில் இந்திய அணி வீரர்களிடையே ஒரு பயம் இருந்தது. அவர்கள் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இல்லை. மேலும் ஒவ்வொரு நபரையும் புரிந்து கொள்வது எனக்கு முக்கிய பணியாக இருந்தது" எனக் கூறியுள்ளார். இந்திய அணிக்கு கேரி கிரீஸ்டன் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!