Sports
கும்பலால் தாக்கப்பட்ட பிரித்வி ஷா.. கார் கண்ணாடி உடைப்பு.. மாடல் அதிரடி கைது..வெளியான அதிர்ச்சி வீடியோ !
இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தனது நண்பரான ஆஷிஷ் யாதவ் மற்றும் சிலருடன் மும்பையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு நேற்று முன்தினம் இரவு உணவருந்த சென்ரோலர். அப்போது பிரித்வி ஷாவை அடையாளம் கண்டுகொண்ட கும்பல் ஒன்று செல்ஃபி எடுக்கவேண்டும் என பிரித்வி ஷாவை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு பிரித்வி ஷாவும் ஒப்புக்கொண்டு சில செல்ஃபிகளை எடுத்துக்கொண்ட நிலையில், அந்த கும்பல் மேலும் சில செல்ஃபி எடுக்கவேண்டும் என கூறியுள்ளது. ஆனால், இதற்க்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், ஹோட்டலின் மேலாளார் உடனடியாக விரைந்து வந்து இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த கும்பலை ஹோட்டலை விட்டு வெளியே அனுப்பியுள்ளது. பின்னர் பிரித்வி ஷா தனது நண்பர்களோடு உணவருந்தி வெளியே வரும்போது வெளியே காத்திருந்த கும்பல் மீண்டும் பிரித்வி ஷாவோடு தகராறு செய்துள்ளது.
மேலும், பிரித்வி ஷாவின் கார் கண்ணாடியை தான் வைத்திருந்த பேஸ் பால் மட்டையால் தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா வேறு காரில் ஏறி அங்கிருந்து சென்றுள்ளார். ஆனாலும் விடாத அந்த கும்பல் அவர்களை துரத்திச்சென்று மீண்டும் கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அதோடு பிரித்வி ஷாவின் நண்பர் ஆஷிஷ் யாதவிடம் இந்த விவகாரத்தை முடிக்க ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காவல்நிலையத்தில் பொய் புகார் அளிப்பேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது. அதன்பின்னர் ஆஷிஷ் யாதவ் இதுதொடர்பாக காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதன்படி அந்த கும்பலையை சேர்ந்த பெண் உட்பட 8 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் அந்த கும்பலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், அந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சப்னா கில் என்ற பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை ன்ஸ்டாகிராமில் 2,20,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்கின்றனர். இவர் பிரித்வி ஷா குடிபோதையில் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பாகவும் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?