Sports
அஸ்வினைப் போல ஜடேஜாவுக்கு டூப் தேட மாட்டார்கள் என்று நம்புகிறேன்-ஆஸ்திரேலியாவை கிண்டல் செய்த முகமது கைப்!
2004-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியவில்லை. ரிக்கி பாண்டிங், ஸ்மித் போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தபோது கூட ஆஸ்திரேலிய அணியால் எதுவும் செய்ய முடியவில்லை.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
ஆனாலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியைத் தடுக்கக் கூடிய ஒரு நபராக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இருந்து வருகிறார். இந்திய மைதானங்களில் இவரின் சுழற்பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் கூட அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தப்போட்டிக்கு முன்னதாக இந்திய மைதானத்தில் அஸ்வின் அபாயகரமான வீரர் என்பதால் அவரை சமாளிக்க அவரை போலவே பந்துவீசும் பரோடா ரஞ்சி அணிக்கு ஆடும் 21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரை வரவழைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்தது. ஆனால், நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜடேஜா அவுட் ஆஃப் சிலபஸாக வந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் ஆஸ்திரேலிய அணியை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "டூப்ளிகேட் அஸ்வினை எதிர்கொள்வதற்கும் உண்மையான அஸ்வினை எதிர்கொள்வதற்கும் இடையேயான வித்தியாசத்தை ஆஸ்திரேலிய அணியினர் இப்போது உணர்த்திருப்பார்கள். ஒரு மகத்தான ஆல் டைம் கிரேட் வீரரை சிறப்பாக எதிர்கொள்ள உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடும் ஒரு இளம் வீரரை எதிர்கொண்டு உங்களால் தயாராக முடியாது. அடுத்ததாக டெல்லியில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா ஜடேஜாவின் டூப்பை தேட மாட்டார்கள் என்று நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!