Sports
"கையில் வலி நிவாரணி எதுக்கு,, வெண்ணெய் எடுத்துக்கோங்க !" -ஜடேஜாவை கிண்டல் செய்து டூடுல் வெளியிட்ட அமுல் !
புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் மற்றும் 70 ரன்கள் குவித்த ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ளது.
முன்னதாக இந்த போட்டியின் முதல்நாளில் போது, முகமது சிராஜ் கொண்டு வந்த ஏதோ ஒரு பொருளை தனது கையால் தொட்டு பந்து வீசும் விரல்களில் ரவீந்திர ஜடேஜா தடவிக் கொண்ட பின்னர் பந்துவீசினார். இதனைக் குறிப்பிட்ட சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஜடேஜா பந்தை சேதப்படுத்தும் விதமாக எதோ கையில் தடவிக்கொண்டார் என விமர்சித்து வந்தனர்.
ஆனால், ஜடேஜா கையில் தடவிக்கொண்டு பொருள் வலி நிவாரணி என்பதும், பந்தை மிகவும் இறுக்கமாக பிடித்து வீசியதால் கை விரல்களில் ஏற்பட்ட வலியை குறைப்பதற்காகவே வலி நிவாரணியை ரவீந்திர ஜடஜா கைகளில் தடவிக் கொண்டார் என்றும் போட்டி நடுவரிடம் இந்திய அணி விளக்கமளித்துள்ளது.
ஆனால், போட்டி முடிந்த பின்னர் போட்டி நடுவர் ஆண்டி பாய்கிராப்ட் இந்த விவகாரத்தில் ஜடேஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி, ஜடேஜா நடுவரின் அனுமதி இல்லாமல் மருந்து தடவியது குற்றம் என்றும், இதற்காக அவருக்கு ஒரு புள்ளிகள் குறைக்கப்பட்டு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நடவடிக்கையை குறிப்பிட்டு பிரபல பால் நிறுவனமான அமுல் ஜடேஜாவை கிண்டல் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டூடுலில் களத்தில் ஜடேஜா பந்து வீசுவது போலவும், அவருக்கு அருகில் அமுலின் டிரேட்மார்க் சின்னமான அமுல் பேபி நிற்பது போன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. வேண்டுமானால் அந்த களிம்புக்கு பதில் விரல்களில் வெண்ணெய் தடவிக் கொள்ளுங்கள் என ஜடேஜாவிடம் சொல்வதை போல அந்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டூடுல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!