Sports
"பலவீனமான இந்த இந்திய அணியை ஆஸ்திரேலியா எளிதில் வீழ்த்தும்" -முன்னாள் இந்திய பயிற்சியாளர் கருத்து !
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இருப்பதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக சுழலுக்கு ஏற்ற இந்திய மைதானங்களை போலவே சிட்னியில் மைதானத்தை தயாரித்து ஆஸ்திரேலியா அணி பயிற்சியில் ஈடுபட்டது. இந்தியாவுக்கு வந்த பின்னரும் சுழல் பந்துவீச்சுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த முறை இந்திய அணி பலவீனமாக இருப்பதால் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சாப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதிய அவர், இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயமடைந்துள்ளதால் இந்திய அணி முழுவதுமாக விராட் கோலியை மட்டுமே நம்பியுள்ளது.
இதனால் இந்திய அணி மிகவும் பலவீனமாக காட்சியளிக்கிறது. ஆஸ்திரேலிய அணி இதனை சாதகமாக பயன்படுத்தி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முழு கவனம் செலுத்த வேண்டும். வேறு எதைப் பற்றியும் ஆஸ்திரேலிய அணியினர் நினைக்காமல் இதைச் செய்தால் இந்திய அணியை வெல்ல முடியும். இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கவனத்தில் கொண்டு விளையாட வேண்டும்" எனக் கூறியுள்ளார். கிரேக் சாப்பல் கங்குலி கேப்டனாக இருக்கும் போது இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!