Sports
"அஸ்வின் ஒரு துப்பாக்கி மாதிரியான பந்துவீச்சாளர்,ஆனால்..." -ஆஸ்திரேலிய தொடக்க வீரர் கவாஜா கருத்து !
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இருப்பதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக சுழலுக்கு ஏற்ற இந்திய மைதானங்களை போலவே சிட்னியில் மைதானத்தை தயாரித்து ஆஸ்திரேலியா அணி பயிற்சியில் ஈடுபட்டது. இந்தியாவுக்கு வந்த பின்னரும் சுழல் பந்துவீச்சுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முழு பயமும் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினின் மீதே இருக்கிறது என்பது அந்த அணியின் பேச்சின் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய மைதானத்தில் அஸ்வின் அபாயகரமான வீரர் என்பதால் அவரை சமாளிக்க அவரை போலவே பந்துவீசும் பரோடா ரஞ்சி அணிக்கு ஆடும் 21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரை வரவழைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்து வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் முதல் வீரர்கள் வரை மூச்சிக்கு முன்னூறு முறை அஸ்வின் அஸ்வின் என்றே புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அஸ்வினை பந்துவீச்சை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "அஸ்வின் ஒரு துப்பாக்கி மாதிரியான வீரர். சிறிய சிறிய அதிகமான வேறுபாடுகள் உடைய சிறந்த பந்து வீச்சாளர். அவர் அதிகமான ஓவர்களை வீசுவார். நிச்சயமாக இது நல்ல சவாலாக இருக்கும். அவர் எப்படி பந்து வீசினாலும் நான் அவரை எப்படி விளையாடப் போகிறேன், ரன்கள் குவிக்கப்போகிறேன் என்பதே முக்கியம்.
ஒரு ஆஃப்-ஸ்பின்னரை எப்படி விளையாட வேண்டுமென முன்னர் கேட்டிருந்தால் எனக்கு அது தெரியாது. ஆனால் இப்போது தேவையானதாய் கற்றுக்கொண்டுள்ளேன். ஆடுகளத்தில் பந்து திரும்பும். அது முதல் நாளிலா, 2வது நாளிலா தெரியாது. இந்தியா போன்ற துணைக்கண்டத்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதானதென பலரும் நினைக்கிறார்கள்.ஆனால் புதியப் பந்தில் ஸ்பின் மற்றும் மாறுபாடுகள் அதிகமாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!