Sports
அடுத்த கால்பந்து உலககோப்பையில் விளையாடுவேனா மாட்டேனா ? - நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் பதில் என்ன ?
22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.
90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.
இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னர் "இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால் உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி, "உலக சாம்பியனாக இன்னும் சில ஆட்டங்களில் விளையாட விரும்புகிறேன்" என்று கூறி தான் ஓய்வு பெறப்போவதில்லை என்பதை தெரியப்படுத்தினார்.
இந்த நிலையில், தற்போது அடுத்த உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து தனது கருத்தை மெஸ்ஸி கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், “எனது வயது காரணமாக 2026 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது மிகவும் கடினம்தான். ஆனால் அடுத்த உலககோப்பைக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது. எனவே நான் நல்ல உடற்திறனோடும், அதே ரசனையோடும் இருந்தால் நிச்சயம் கால்பந்து விளையாடுவதை தொடருவேன். ஆனால், அது எனது கெரியரின் போக்கை பொறுத்தே அமையும் " என்று கூறினார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு