Sports
120 மில்லியன் யூரோ.. உலககோப்பையில் சிறந்த இளம்வீரர் விருது வென்றவருக்கு கொட்டிக்கொடுத்த கால்பந்து கிளப்!
22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.
90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.
இந்த தொடரில் அதிக கோல் அடித்த வீரருக்கான தங்க ஷூ விருதை இளம்வீரர் எம்பாப்பே வென்றநிலையில், தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதை மெஸ்ஸி வென்றார். அதேபோல சிறந்த கோல் கீப்பர் விருது அர்ஜென்டின கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ்க்கு வழங்கப்பட, சிறந்த இளம் ஆட்டக்காரர் விருதை அர்ஜென்டினாவின் என்ஸோ ஃபெர்னாண்டெஸ் வென்றார்.
இந்த நிலையில், தற்போது கால்பந்து லீக் போட்டிகளின் குளிர்கால வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உலகக்கோப்பையில் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருதை அர்ஜென்டினாவின் என்ஸோ ஃபெர்னாண்டெஸ் இங்கிலாந்தின் புகழ்பெற்ற செல்சி கால்பந்து கிளப் அணி 120 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளது.
என்ஸோ ஃபெர்னாண்டெஸ் இதற்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த பென்பிகாவுக்கு ஆடிவந்த நிலையில், பல கோடிகளை கொட்டி செல்சி அணி அவரை வாங்கியுள்ளது. செல்சி அணி இந்த குளிர்கால வீரர்கள் பரிமாற்ற காலத்தில் மட்டும் 288 மில்லியன் யூரோ செலவு செய்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!