Sports
அணிதான் முக்கியம்.. சூரியகுமாருக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்த வாஷிங்டன் சுந்தர்..ரசிகர்கள் பாராட்டு!
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் சூரியகுமார் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இறுதிவரை போராடி அரைசதம் அடித்து கடைசி ஒவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே குடித்து தோல்வியைத் தழுவியது.
அதன்பின்னர் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே குவித்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது.
6 ஒவரில் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்தியா அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது களத்துக்கு வந்த வாஷிங்டன் சுந்தர் சூரியகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை குவித்து வந்தார்.
அப்போது சூரியகுமார் செய்த தவறால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பரிதாபமாக ரன்அவுட் செய்யப்பட்டார். அவர் தனது விக்கெட்டை காப்பாற்றியிருக்க முடியும் என்றாலும் அணியின் நலனுக்காக அவர் தனது விக்கெட்டை தியாகம் செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்த பின்னர் சூரியகுமார் -ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்த அணியை வெற்றிபெற வைத்தனர். எனினும் இறுதிஓவர் வரை இந்த போட்டி பரபரப்பாக சென்றது ஆட்டத்தின் சுவாரசியத்தை கூட்டியது.
இந்த போட்டிக்கு பின்னர் ஆட்ட நாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ் வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட்டான சம்பவத்தை குறிப்பிட்டு அது முழுக்க முழுக்க தன்னுடைய தவறால் நடந்தது என்றும். அந்த தருணத்தில் பந்து எங்கே சென்றது என்பதை நான் பார்க்கவில்லை என்றும் கூறி தவறுக்கு முழு பொறுப்பேற்பதாக கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!