Sports
இதை செய்தால் மட்டுமே நோ-பால் பிழையை சரிசெய்ய முடியும் -அர்ஷ்தீப் சிங்குக்கு முகமது கைஃப் அறிவுரை !
நேற்று நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் சூரியகுமார் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இறுதிவரை போராடி அரைசதம் அடித்து கடைசி ஒவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே குடித்து தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இறுதி ஒவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. மேலும், இறுதிஓவரில் அவர் நோ பால் வீசியதும் அந்த ஒரே பந்தில் 13 ரன்கள் விலாசப்பட்டதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரே ஒவரில் 3 நோ பால் மற்றும் அந்த போட்டியில் 4 நோ பால் வீசியதற்கு அர்ஷ்தீப் சிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அர்ஷ்தீப் தனது ரன்-அப்பைக் குறைத்தால் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய முடியும் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,"அர்ஷ்தீப்புக்கு நீண்ட ரன்-அப் உள்ளது. அங்கே சக்தியை வீணடிக்கிறார்.
இதனால் அவரால் சரியான அளவில் கால்களை வைக்கமுடியவில்லை. எனவே, நோ-பால்களுக்கு முக்கிய காரணம் அவரது நீண்ட ரன்-அப்தான் இதனால் அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு