Sports
இறுதிப்போட்டியில் தோல்வி.. முடிவுக்கு வந்த சானியா மிர்சாவின் கிராண்ட்ஸ்லாம் பயணம்.. கண்ணீர் பேட்டி !
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா இணை பிரேசில் இணையிடம் தோல்வியடைந்து 2ஆம் இடம் பிடித்தது. கிராண்ட்ஸ்லாம் வென்று வரலாற்று சாதனையுடன் சானியா மிர்சா தனது டென்னிஸ் கேரியரை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவும் இருந்தது. இதையடுத்து, போட்டிக்கு பிறகு கண்ணீருடன் சானியா மிர்சா தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய கிராண்ட்ஸ்லாம் பயணம் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியதாக உணர்ச்சிப்பூர்வமாக கூறிய சானியா, இந்த தருணத்தில் ஆனந்த கண்ணீருடன் மகிழ்வாக இருப்பதாகவும், அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ரோகன் போபண்ணா குறித்து பேசியுள்ள சானியா, போபண்ணா தன்னுடைய முதல் கலப்பு இரட்டையர் இணை என்றும், 14வயதில் தேசிய பட்டத்துடன் அவருடன் தொடங்கிய பயணம், 22 ஆண்டுகள் தொடர்வதாக இந்த தருணத்தில் நினைவூட்டியுள்ளார்.தன்னுடைய சிறந்த நண்பர் என்றும், போட்டி களத்தில் தன்னுடைய சிறந்த இணையாக போபன்ணா விளையாடியுள்ளார் எனவும் அவருடனான கள நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
2005ல் மெல்போர்னில் தனது டென்னிஸ் பயணத்தை தொடங்கிய சானியா மிர்சா, 2023ல் அதே மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்தியாவிலிருந்து டென்னிஸ் களத்தில் தனிப்பெரும் அடையாளமாக உருவெடுத்துள்ள சானியா மிர்சாவின் இந்த சாதனைக்கு, ரசிகர்கள் ட்விட்டர் மூலம் அவருக்கு உணர்வுப்பூர்வமாக வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
டென்னிஸில் பல சாதனைகள் படைத்துள்ள சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன்,பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். மேலும், தனிநபர் பிரிவில் உலகளவில் டாப் 30 இடத்துக்குள் வந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் சானியா மிர்சா பெற்றுள்ளார். அதோடு இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும் சில ஆண்டுகள் வலம்வந்துள்ளார். தற்போது கிராண்ட்ஸ்லாம் பயணத்தை நிறைவு செய்துள்ள சானியா மிர்சா, துபாயில் நடைபெறவுள்ள டபிள்யூ டி ஏ தொடர் மூலம் தனது டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !