Sports
பிரபல நடிகரின் மகளை மணந்த KL ராகுல்.. திருமணத்துக்கு கோலி, தோனி வழங்கிய பரிசை கண்டு மலைக்கும் ரசிகர்கள் !
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தை சேர்ந்த இவர் உள்நாட்டு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்தினார்.
தற்போது 30 வயதாகும் கே.எல்.ராகுல் தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை இரண்டு நாட்களுக்கு முன்னர் இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்தார். அவர்களின் திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக கே.எல்.ராகுலுக்கு கோடிக்கணக்கான மதிப்புடைய பொருள்கள் பரிசாக வந்துள்ளது.
கே.எல்.ராகுலில் மாமனாரும் நடிகருமான சுனில் ஷெட்டி திருமண பரிசாக இந்த தம்பதிக்கு மும்பையில் உள்ள ரூ.50 கோடி மதிப்பிலான வீட்டை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சல்மான் கான் மணப்பெண்ணுக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான ஆடிக்காரையும், நடிகர் ஜாக்கி ஷெராப் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆடம்பர வாட்ச் ஒன்றையும் பரிசாக வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி கே.எல்.ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான BMW காரை பரிசாகக் கொடுத்திருபதாகவும், எம்.எஸ்.டோனி கே.எல்.ராகுலுக்குரூ. 80 லட்சம் மதிப்பிலான ஆடம்பர பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர ஏராளமான முக்கிய பிரபலங்கள் பல்வேறு மதிப்புடைய பொருள்களை இந்த தம்பதிக்கு பரிசாக வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?