Sports
"உம்ரான் மாலிக் முதலில் தனது எலும்புகள் உடையாமல் பார்த்துக்கொள்ளட்டும்" -பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை!
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிவேக பந்துவீச்சு மூலம் கவனம் ஈர்த்தார். அதில் தொடர்ந்து தனது சிறப்பான அதிவேகப்பந்துவீச்சின் மூலம் இந்திய அணியில் அவருக்கு இடம் வழங்கப்பட்டது. இந்திய அணியிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதிலும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பௌலராகத் திகழ்ந்தார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இந்த இளம் வீரர். இந்த 3 போட்டிகளில், 11 ஓவர்கள் பந்துவீசிய அவர், 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்ல, தன்னுடைய அதிவேகமான பந்துவீச்சையும் இந்தத் தொடரில் தொடர்ந்தார் அவர்.
இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் வீசிய ஒரு பந்தை மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருந்தார் அவர். இதுநாள் வரை ஒரு இந்திய பௌலர் வீசிய அதிவேகமான பந்து அதுதான். இதன் காரணமாக உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அவர் இந்தியாவுக்கு கிடைத்த சொத்து என சர்வதேச வீரர்களும் உம்ரான் மாலிக்கை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது, இங்கிலாந்து அணிக்கு எதிராக 161 கிலோமீட்டர் வேகத்தில் வீசி அதிவேக பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்னிடம் வைத்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரின் சாதனையை விரைவில் உம்ரான் மாலிக் உடைப்பார் என பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து சோயப் அக்தரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இத்தனை வருடம் என்னிடம் இருக்கும் இந்த சாதனையை உம்ரான் மாலிக் முறியடித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அப்படி அவர் முறியடிக்கும் இந்த வேளையில் அவர் தனது எலும்புகள் உடைந்திடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அவர் ஃபிட்டாக இருக்க வேண்டும்.
ஏனெனில் நான் வேகமாக பந்துவீசி நிறைய காயங்கள் அடைந்திருக்கிறேன். விளையாட்டு வீரருக்கு காயங்கள் அவ்வளவு எளிதல்ல. உம்ரான் மாலிக் மிக எளிய இளம் வீரராக இருக்கிறார். காயம் அடைந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!