Sports

உசேன் போல்ட் பணத்தை திருடியது யார்?.. எப்படி? .. முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

ஜமைக்காவில் பிறந்து உலகமே வியந்து பார்க்கும் உச்சபட்ச சாதனைகள் பலவற்றையும் படைத்தவர்தான் மின்னல் வேக ஓட்டக்காரர் உசேன் போல்ட் . பத்து வினாடிக்குள் 100 மீட்டர் தொலைவைக் கடக்க எவருமே யோசித்துக்கூடப் பார்க்காத போது அந்த யோசனையை முறியடித்தவர். ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் ஜெயிப்பதே பலருக்கும் கனவாக இருக்கும்போது, போல்ட் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரரும் இவர்தான்.2009ல் பெர்லினில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார் உசைன் போல்ட். இந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது.

11 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற போல்ட் 2017-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். எனினும் தற்போதுவரை உலகின் அதிவேக மனிதர் என்றே அழைக்கப்படுகிறார். இவர் போட்டிகளில் வென்றதன் மூலமும், விளம்பரம் மூலமும் உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரராகத் திகழ்ந்து வருகிறார்.

அப்படி தனக்கு வந்த தொகையை உசேன் போல்ட் ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) என்ற முதலீட்டு நிறுவனத்தில் 2012ம் ஆண்டு முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில், அந்த முதலீட்டு நிறுவனத்தில் இருந்து உசேன் போல்ட் 12 மில்லியன் டாலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி சுமார் 98 கோடி.

இந்த முதலீட்டுப் பணம் எப்படித் திருடப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உசேன் போல்ட் 2012ம் ஆண்டு முதல் ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) என்ற முதலீட்டு நிறுவனத்தில் தனது பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார்.

பின்னர் அவரது வங்கிக் கணக்கில் வெறும் 2 ஆயிரம் மட்டுமே பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து 10 ஆண்டாக முதலீடு செய்து வந்த பணம் எங்கே என விசாரணை செய்தபோதுதான், அதே முதலீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியர் ஒருவர் திருடியது தெரியவந்துள்ளது.

மேலும் உசேன் போல்ட் போன்று மேலும் 30 பேரின் கணக்கில் இருந்தும் அந்த ஊழியர் பணத்தை யாருக்கும் தெரியாமல் கொள்ளையடித்துச் சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஜனவரி 11ம் தேதி வரை நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த பெரிய நிதி மோசடி குறித்து ஜமைக்கா நிதிச் சேவை ஆணியம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. பிரபல ஒட்டப்பந்தைய வீரர் உசேன் போல்ட் பணத்தையே திருடிய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "மெதுவாக விளையாடியதால் தோல்வி.. தோனியை திட்டிய ரவி சாஸ்திரி..பீல்டிங் பயிற்சியாளரின் கருத்தால் சர்ச்சை !