Sports
சச்சின், கோலி இருவரில் மிகச் சிறந்த வீரர் யார் ? -அதிர்ச்சியளிக்கும் பதிலை கூறிய ஆஸ்திரேலிய கேப்டன்!
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் மீது விழுந்திருக்கிறது. 34 வயதான விராட் கோலி சமீபமாக மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் அடுத்தடுத்து சதங்கள் அடித்து மிரட்டினார் அவர். அதனால், இலங்கை அணியை வைட் வாஷ் செய்தது இந்திய அணி.
முதல் ஒருநாள் போட்டியில் 87 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. அந்த இன்னிங்ஸில் 12 ஃபோர்களும், ஒரு சிக்ஸரும் அடித்தார் அவர். அதனால், 50 ஓவர்களில் 373 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 374 என்ற பெரிய இலக்கை டார்கெட் செய்த இலங்கை, 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அந்த அணி. மூன்றாவது போட்டியில் 110 பந்துகளில் 166 ரன்கள் குவித்தார் விராட். அந்த இன்னிங்ஸில் 13 ஃபோர்களும், 8 சிக்ஸர்களும் அடித்திருந்தார் அவர். அந்தப் போட்டியில் இளம் ஓப்பனர் சுப்ம கில்லும் சதம் அடிக்க, 50 ஓவர்களில் 390 ரன்கள் குவித்தது இந்திய அணி. மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த இலங்கை, இந்திய பௌலர்களை சமாளிக்க முடியாமல், 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிகச் சிறப்பாகப் பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
ஆனால், இந்திய அணிக்கு கோலி மட்டுமே முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்திருக்கவில்லை. 2013 வரை இந்திய அணியின் தூணாக இருந்தார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். 2003 ஐசிசி உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதும் வென்றிருந்தார் சச்சின். பலராலும் உலகின் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் சச்சின், 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸிடம், சச்சின், கோலி இருவரில் யார் மிகச் சிறந்த வீரர் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்வி கேட்கப்பட்டதும் அதிர்ச்சியடைந்தார் கம்மின்ஸ். டெஸ்ட் தொடரின் டீஸருக்கான ஒரு பேட்டியில் உஸ்மான் கவாஜா கம்மின்ஸிடம் "சச்சினா, கோலியா" என்ற கேள்வியைக் கேட்டார்.
அந்த கேள்வியைக் கேட்டதும், "எதில் சமைப்பதிலா?" என்று கேட்டார்.
"நான் சச்சினுக்கு எதிராக ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியிருக்கிறேன். அதுவும் பல வருடங்களுக்கு முன்பாக. அதனால், நான் கோலியை தேர்வு செய்வேன்" என்று கூறினார் கம்மின்ஸ்.
அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் ஃபேம் ஃபோரை ரேங்க் செய்யுமாறு கவாஜாவிடம் கூறினார் கம்மின்ஸ். அதற்கு பதிலளித்த கவாஜா, "நான் டெண்டுல்கருக்கு முதல் ரேங்க் கொடுப்பேன். டிராவிட் இரண்டாவது இடம். மூன்றாவது தாதா கங்குலி. லட்சுமணை நான்காவது இடத்தில் வைப்பது வருத்துமாக இருக்கிறது. அதிலும் நான் அவர் பேட்டிங்கை ரசிப்பவர். இருந்தாலும், இடது கை பேட்ஸ்மேனுக்குத்தான் முன்னுரிமை" என்று கூறினார் அவர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!