Sports
"பாகிஸ்தான் வீரரோடு இந்த இந்திய வீரரை எப்படி ஒப்பிட முடியும்" -கோலியை வைத்து முன்னாள் வீரர் விமர்சனம் !
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிவேக பந்துவீச்சு மூலம் கவனம் ஈர்த்தார். அதில் தொடர்ந்து தனது சிறப்பான அதிவேகப்பந்துவீச்சின் மூலம் இந்திய அணியில் அவருக்கு இடம் வழங்கப்பட்டது. இந்திய அணியிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதிலும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பௌலராகத் திகழ்ந்தார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இந்த இளம் வீரர். இந்த 3 போட்டிகளில், 11 ஓவர்கள் பந்துவீசிய அவர், 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்ல, தன்னுடைய அதிவேகமான பந்துவீச்சையும் இந்தத் தொடரில் தொடர்ந்தார் அவர்.
இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் வீசிய ஒரு பந்தை மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருந்தார் அவர். இதுநாள் வரை ஒரு இந்திய பௌலர் வீசிய அதிவேகமான பந்து அதுதான். இதன் காரணமாக உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அவர் இந்தியாவுக்கு கிடைத்த சொத்து என சர்வதேச வீரர்களும் உம்ரான் மாலிக்கை கொண்டாடி வருகின்றனர்.
அதோடு, இந்திய ரசிகர்கள் சிலர் உம்ரான் மாலிக்கை 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்துவீசும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப்புடன் ஒப்பிட்டு பேசிவருகின்றனர். இந்த நிலையில், உம்ரான் மாலிக்கை ஹாரிஸ் ரவூப்போடு ஒப்பிடுவது விராட் கோலியை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவது போல என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் ஜவத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "உம்ரான் மாலிக் முதல் இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக 150+ கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருகிறார். ஆனால் ஏழாவது, எட்டாவது ஓவரின்போது, அவரது வேகம் குறைந்து 138-140 கிலோமீட்டர் வேகத்தில்தான் வீசுகிறார்.
ஆனால் ஹாரிஸ் ரவூப் முதல் ஓவரில் இருந்து போட்டியின் கடைசி ஓவர் வரை சீரான வேகத்தில் பந்து வீசுகிறார். இப்படி இருக்கும் பொழுது எந்த வகையில் இருவரையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. இந்த ஒப்பீடு விராட் கோலியை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவது போல இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!