Sports
நடு ரோட்டில் கன்னத்தில் அறைந்த காதலி.. Worldcup வென்ற கேப்டனுக்கு நடந்த சோகம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கேல் கிளார்க் அந்நாட்டு அணிக்கு தலைமை வகித்து 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நாட்டுக்காக வென்றுகொடுத்தார். ரிக்கி பாண்டிங் ஓய்வு பெற்று அவர் இடத்துக்கு வந்து சரிந்து வந்த ஆஸ்திரேலியா அணிக்கு உலகக்கோப்பையை வென்றுகொடுத்தது அவரின் மதிப்பை பலமடங்கு உயர்த்தியது.
இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 115 டெஸ்ட் போட்டிகளில் 8643 ரன்களும், 245 ஒரு நாள் போட்டிகளில் 7981 ரன்களும்,34 டி20 போட்டிகளில் 488 ரன்களும் குவித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் புனே அணிக்காகவும் விளையாடியுள்ளார். தனது ஓய்வுக்கு பின்னர் தற்போதுவரை வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு கைலி கிளார்க் என்பவரை திருமணம் செய்து கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின்னர் பிப் எட்வர்ட்ஸ் என்பவருடன் பழகிவந்த இவர் தற்போது ஜேடு என்ற பெண்ணோடு வசித்து வருகிறார்,
இவர்கள் இருவரும் வெளியே சென்ற நிலையில், அங்கு பொதுஇடத்தில் ஜேடு மைக்கேல் கிளார்க்கை கன்னத்தில் அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளிவந்த வீடியோவில் நீ பிப் எட்வர்ட்ஸ்க்கு அனுப்பிய அனைத்து மெசேஜ்களையும் நான் படித்தேன். இந்தியாவுக்கு அவளை அழைத்துச் செல்ல நீ திட்டம் போட்டுள்ளாய். கிறிஸ்துமஸ்க்கு முன்பு அவளை நீ வீட்டிற்கு அழைத்து வந்து நமது பெட்ரூமில் அமர்ந்து அவளுடன் நீ இருந்ததை நான் தெரிந்து கொண்டேன் என்று ஜேட் கூறியுள்ளார்.
இதன் மூலம் மைக்கேல் கிளார்க் முன்னாள் காதலியோடு தற்போது பழகிவந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மைக்கேல் கிளார்க் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் " என் மீது நல்ல மதிப்பு வைத்திருந்த அனைவரையும் நான் தலைகுனிய வைத்திருக்கிறேன். எனது செயலுக்கு நான் வெட்கப்படுகிறேன், மேலும், இந்த சம்பவத்திற்கு நான் முழு பொறுப்பை ஏற்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!