Sports
மெஸ்ஸியின் அற்புத கோல்.. திரும்பிகொடுத்த ரொனால்டோ.. அதிர்ந்த அரங்கம்- பரபரப்பான போட்டியில் வென்றது யார்?
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரொனால்டோவால் அல் நாசர் அணி பங்கேற்கும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அல் நாசர் அணியில் இணையும் முன்னர் ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார்.
அப்போது எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரோடு புகைப்படம் எடுக்கவந்த ஆட்டிசம் குறைபாடு கொண்டு சிறுவன் ஒருவரின் கைப்பேசியை ரொனால்டோ தட்டி விட்டதால் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் இரண்டு போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவர் தனது முதல் போட்டியிலேயே அவரின் நீண்ட நாள் போட்டியாளரான மெஸ்ஸியை எதிர்த்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணி சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கு சவுதி அரேபிய கிளப் ஆல் ஸ்டார் அணிக்கு எதிராக நட்பு போட்டி ஒன்றில் ஆடவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், PSG அணிக்காக மெஸ்ஸியும், சவுதி அரேபிய கிளப் ஆல் ஸ்டார் அணிக்காக ரொனால்டோவும் எதிர் எதிராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்த இரண்டு வீரர்களும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நேருக்கு நேர் எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த போட்டியை காண ஏலம் விடப்பட்ட டிக்கெட் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 21 கோடிக்கு ஏலம் போனது. இதன் மூலம் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டிக்கெட் என்ற பெருமையை இது பெற்றது.
இந்த நிலையில். 19-ம் தேதி இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் PSG அணிக்காக மெஸ்ஸி முதல் கோல் அடித்த நிலையில், சவுதி அரேபிய கிளப் ஆல் ஸ்டார் அணிக்காக ரொனால்டோ பதில் கோல் அடித்து அசத்தினார். மேலும் ரொனால்டோ மற்றொரு கோலையும் அடித்து அதகளப்படுத்தினர்.
இறுதிவரை சுவாரசியமான நடைபெற்ற இந்த போட்டியில் PSG அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை ரொனால்டோ வென்று அசத்தினார். இனி மெஸ்ஸி -ரொனால்டோ என்ற இந்த இரு ஜாம்பவான்களும் பெரும்பாலும் மோத வாய்ப்பில்லாத நிலையில், இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !