Sports

"IPL தொடரில் பங்கேற்று காசை இழந்து போண்டி ஆனேன்" -ஆஸ்திரேலிய வீரரின் பேச்சால் பரபரப்பு.. நடந்தது என்ன ?

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐ.பி.எல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல் தொடரில் பணம் கொழிப்பதால் அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதனால் இதில் பங்கேற்க சர்வதேச வீரர்கள் அதிகம் காட்டி வருகின்றனர். ஏலத்தில் தங்களை யாரும் எடுக்கமாட்டார்களா என பல்வேறு நாடுகளின் நட்சத்திர வீரர்களும் ஆவலோடு காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றதால் அனைத்தையும் இழந்துள்ளேன் என ஆஸ்திரேலிய வீரர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ'கீஃப். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொச்சி அணிக்காக 20,000 அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பில் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், கொச்சி அணி அந்த சீசனோடு முடிவுக்கு வந்ததால் ஒப்பந்தத்தின் படி அதில் 30% மட்டுமே (6,000 அமெரிக்க டாலர் )அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இந்த போட்டிக்காக தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கட்டணம் மட்டுமே 7,500 அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு வந்துள்ளது. அறை கட்டணம் குறித்த தொகையை பார்க்காததால் இந்த அளவு பணத்தை தான் இழந்ததாக முன்னணி நிறுவனத்திடம் தனது ஐபிஎல் அனுபவம் குறித்து அவர் கூறியுள்ளார்

Also Read: எம்பாப்பேயை கிண்டல் செய்த அர்ஜென்டினா வீரர்கள்.. விசாரணையை தொடங்கிய FIFA.. சிக்குவாரா மெஸ்ஸி ?