Sports
"டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டின் இடத்துக்கு இவரே மாற்று"-இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் கணிப்பு!
இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷல் படேல், பண்ட், வருண் சக்கரவர்த்தி என இளம் வீரர்களின் பட்டியல் நீண்ட உள்ளது. இதனால் இளம் வீரர்களுக்குள் இந்திய அணியில் தங்களுக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டிகள் எழுந்துள்ளது.
கிடைக்கும் ஒன்று இரண்டு போட்டிகளிலும் அவர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இளம் வீரர்கள் உள்ளனர். இது அவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இவர்களால் மூத்த வீரர்களுக்குச் சிக்கல் உள்ளது.
என்னதான் சிறந்த வீரராக இருந்தாலும் தொடர்ந்து சரியாக விளையாடவில்லை என்றால் விமர்சனத்தில் இருந்து தப்ப முடியாது. அதிலும் அவர் இடத்தை நிரப்ப இரண்டுக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தால் இன்னும் அவரின் நிலை படும் கஷ்டம்தான். இந்த சிக்கலைத்தான் தற்போது வீராட் கோலி, ரோகித் ஷர்மா,கே.எல்.ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் சந்தித்து வருகின்றனர்.
மேலும் இளம் வீரர்களின் திறமையை வெளி கொண்டு வரும் விதமாகவும், ஒரு வலுவான இந்திய அணியைக் கட்டமைக்கும் விதமாகவும் தான் இளம் வீரர்களை கொண்டு ஜிம்பாமே, நியூசிலாந்து போன்ற தொடர்களில் இந்திய அணி விளையாடியது.இந்த தொடர்களின் எல்லாம் இளம் வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.அதிலும் குறிப்பாக வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இளம் வீரர் இஷான் கிஷான் 200 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், சாலை விபத்தில் காயமடைந்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் டெஸ்ட் போட்டிக்கான இடத்துக்கு சரியான வீரராக இளம் வீரர் இஷான் கிஷான் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இஷான் கிஷன் தற்போது சிறப்பான ஃபார்ம்மில் இருப்பதால் அவர் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வுசெய்யப்படவேண்டும், அவர் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு வலுவான போட்டியாளராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும் ஒரு இடது கை பேட்ஸ்மேன்.
ஒரு வீரர் ஃபார்மில் இருக்கும்போது, அவர்களை பெஞ்சில் வைத்திருப்பது சரியல்ல. சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடும் திறன் கொண்டவர். அவர் தனது கடைசி ரஞ்சி போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார்.நான் சூர்யகுமாரின் பேட்டிங்கைப் பார்த்த அளவுக்கு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியைப் போலவே, அவரும் மூன்று வடிவங்களிலும் விளையாட முடியும் என்று என்னால் சொல்ல முடியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அனைத்து வடிவங்களிலும் விளையாடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் இந்தியாவுக்கு கிடைத்துள்ளார் ” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!