Sports
50 உலக கோப்பையில் இவரால் ஆட முடியாது - வெளியான அதிர்ச்சி தகவல்.. இந்திய ரசிகர்களை சோகம்
இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வரும் இளம் வீரர் ரிஷப் பண்ட், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது.
இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் உடல்நிலை சீராக இருக்கும் நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் மூளையில் எந்த வித பிரச்னையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், வலது முழங்காலில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட தசைநார் கிழிப்பிற்கு 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதிலிருந்து ஆறு வாரங்களுக்குப்பின், மீண்டும் இதே முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட உள்ளது.
இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, ஐ.பி.எல்., தொடரில் அவர் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கவுள்ள 50 உலக கோப்பையிலும் விளையாட முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!