Sports
3 ஆண்டுகளில் ஒரே போட்டியில் மட்டுமே.. உலகக்கோப்பை தோல்விக்கு இதுவும் ஒரு காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது.இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உலகக்கோப்பை தோல்விக்கு அணி நிலையாக இல்லாததே காரணமாக கூறப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் இந்திய அணியில் இருந்து ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்பட்டது.
அதோடு கே.எல்.ராகுல், பும்ரா போன்ற மூத்த வீரர்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் சேர்ந்து விளையாட முடியாமல் இருந்தது. அதே நேரம் இப்படி இந்திய அணிக்காக ஆடும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் முன்னாள் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூட, இந்திய அணியில் இருந்து ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கபட்டதே தோல்விக்கு காரணமாக இருந்தது எனக் கூறியிருந்தார்.
மேலும், "வீரர்கள் ஓய்வு எடுக்கும் இந்த வழக்கத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐபிஎல் தொடர் நடக்கும்போது நீங்கள் யாரும் ஓய்வு எடுக்கவில்லையே. அப்படி இருக்கும்போது இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது மட்டும் எதற்காக ஓய்வு எடுக்கவேண்டும்?" என்றும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்களான பும்ரா, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து கடந்த 3 ஆண்டுகளில் ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடைசியாக 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்கள் மூவரும் சேர்ந்து விளையாடியுள்ளனர். அதன்பின்னர் ஓய்வு, காயம் போன்ற காரணங்களால் மூவரும் சேர்ந்து விளையாடவே இல்லை.இதனைக் குறிப்பிட்டு ரசிகர்கள் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!