Sports
டி வில்லியர்ஸை விட சூரியகுமார் 100 % சிறந்த வீரர் -பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழாரம் !
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 51 பந்துகளின் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவரின் அதிரடி காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார். மேலும், இந்தியாவில் தனது முதல் சதத்தையும் சூரியகுமார் யாதவ் விளாசியுள்ளார். ரோஹித் சர்மா மொத்தம் 4 சதங்களோடு முதல் இடத்தில இருக்கும் நிலையில் சூரியகுமார் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சளர் ஷோயப் “அக்தர் தனது அணியில் ஏபி டி வில்லியர்ஸை விட சூர்யகுமார் யாதவை தான் தேர்ந்தெடுப்பேன் எனக் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், டி வில்லியர்ஸ் ஒரு கிளாஸ் வீரர், ஆனால் சூர்யகுமார் ஒரு கணிக்கமுடியாத வீரர். அதனால்தான் அவர் ஏபி டி வில்லியர்ஸை விட 100 சதவீதம் சிறந்து விளங்குகிறார். எனது அணியில் அவரைதான் தேர்ந்தெடுப்பேன்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்