Sports
சர்வதேச போட்டியின்போது மைதானத்திலேயே சிகரெட் லைட்டர் கேட்ட ஆஸ்திரேலிய வீரர்.. வெளிவந்த வைரல் வீடியோ !
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அதன்பின்னர் மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் கவாஜா மற்றும் மர்னஸ் லபுசனே ஆகியோர் இணைந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை ஆடிவந்த நிலையில் போட்டியின் போது திடீரென லபுசனே தன் அணியின் ஓய்வு அறையை நோக்கி சிகரெட் வேண்டும் என்பது போல சைகை செய்தார்.
அதனை தொடர்ந்து பார்த்தபோது சிகரெட் பற்றவைக்கும் லைட்டர் வேண்டும் என்று கேட்டது தெரியவந்தது. பின்னர் ஓய்வு அறையில் இருந்து சிகரெட் லைட்டர் எடுத்துவரப்பட்டு நிலையில், அதனை வைத்து தனது ஹெல்மெட்டில் இருந்த பழுதை லபுசனே சரிசெய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய லபுசனே 151 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 475-4 என்ற வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் சதமடிக்க, தொடக்க வீரர் கவாஜா 195 ரன்கள் குவித்து தொடர்ந்து ஆடிவருகிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!