Sports
இனியும் இவர்களை நம்பினால் வேஸ்ட் .. கோலி, ரோகித் ஷர்மா மீது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விமர்சனம்!
இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து அணிகளும் இந்த தொடருக்காக தயாராகி வருகிறது. 2011ம் ஆண்டில் தோனி வாங்கி கொடுத்த உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் இந்தியா போராடித் தோற்றது.
இதனால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என இந்திய வீரர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் இந்த தொடர் இந்தியாவில் நடப்பதால் இது இந்திய அணிக்குச் சாதகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
அதேநேரம் 2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்கு 7 பேர் கேப்டனாக தலைமை தாங்கியுள்ளனர். இது இந்திய அணிக்கு ஒரு வலுவான தலைமை இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் விராட் கோலி, ரோகித் ஷர்மா பேன்ற மூத்த வீரர்களின் செயல்பாடும் மோசமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்ல ரோஹித், கோலியை மட்டுமே நம்பி பயனில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கபில்தேவ், " இந்தாண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமானால் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. அது ஒருபோதும் நடந்தேறாது. இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!