Sports
புதிய ஆண்டை வெற்றியோடு தொடங்குவாரா ஹர்திக் பாண்டியா?.. இன்று இலங்கை vs இந்தியா முதல் T20 போட்டி!
இந்திய அணிக்கு 2022ம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாகவே இருந்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான அனைத்து வாய்ப்பும் இருந்தும் இந்திய அணியால் கோப்பையை வெல்லமுடியவில்லை.
மேலும் கடந்த ஆண்டு மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணிக்கு 7 கேப்டன்கள் இருந்து அணியை வழிநடத்தியுள்ளனர். இது இந்திய அணிக்கு ஒரு வலுவான தலைமை இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அதோடு திறமையான இளம் வீரர்கள் வரிசையில் இருப்பதால் யார் யாருக்கு எந்த எந்த போட்டியில் முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பமும் தொடர்ந்து இருப்பதால் அணியில் வீரர்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருந்து வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத் தொடரை முடித்துக் கொண்ட இந்திய அணி 2023ம் ஆண்டு முதல் முறையாக இலங்கை தொடரை விளையாடுகிறது. டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நடைபெறும் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இலங்கை தொடருக்கான டி20 போட்டிகளுக்கும் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த தொடரில், இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டி20 போட்டி இன்று மும்பையிலும், 2வது போட்டி ஜன.5ம் புனேவிலும், கடைசி போட்டி ஜன.7ல் ராஜ்கோட்டிலும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டி ஜன 10ம் தேதி கவுகாத்தியில் முதல் போட்டியும், இரண்டாவது போட்டி ஜன.12ல் கொல்கத்தாவிலும், மூன்றாவது போட்டி ஜன15ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளன.
டி20 தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மீண்டும் களம் காண்கிறது. ஏற்கனவே நவம்பரில் நடந்த நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடிய ஹர்திக் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. அதனால் இந்திய அணி இன்று கூடுதல் நம்பிக்கையுடன் இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்தியா அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூரியகுமார் யாதவ் (துணை கேப்டன்), அர்ஷ்தீப் சிங், யஜ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெயிக்வாட், தீபக் ஹூடா, இஷான் கிஷன், முகேஷ் குமார், ஹர்ஷல் படேல், அக்சர் படேல், சஞ்சு சாம்சன், ஷிவம் மாவி, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர்.
இலங்கை அணி: தசுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா (துணை கேப்டன்), சரித் அசலங்கா, அஷென் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, சமிகா கருணரத்னே, லாகிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா, குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, பிரமோத் மதுஷான், பானுகா ராஜபக்ச, கசுன் ரஜிதா, சதீரா சமரவிக்ரம, மஹீஷ் தீக்ஷனா, நுவன் துஷாரா, துனித் வெல்லாலகே.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!