Sports
விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்.. மூளை, முட்டி பிரச்னை ? : SCAN ரிப்போர்ட் சொல்வது என்ன? -வெளியான தகவல்
இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் இளம் வீரர் ரிஷ்ப் பண்ட். தனது அதிரடி ஆட்டத்தால் தனக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். வங்கதேசத் தொடரை முடித்துக் கொண்டு ரிஷப் பண்ட் இந்தியா திரும்பினார். இதையடுத்து அவர் டெல்லியிலிருந்து உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த டிவைடரில் மோதியது. இதனால் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ரிஷப் பண்டை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரிஷப் பண்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ரிஷப் பண்டிற்கு முழங்கால் ஜவ்வு கிழிந்துவிட்டது எனவும், முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் முன்பு போல் விளையாட பல மாதங்கள் ஆகும் எனவும் தெரிகிறது. இத்தனை அடி பட்டாலும் ரிஷப் பண்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி அவருக்கு எடுக்கப்பட்ட MRI ஸ்கேனில், அவரது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவரது முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படும் எனவும், முட்டி மற்றும் கணுக்காலில் வீக்கமும் வலியும் இருப்பதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரிஷப் விபத்தில் சிக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதி கலங்க வைத்தது. அதில் வேகமாக கார் டிவைடரில் மோதி தூக்கி விசப்படுகிறது. உடனே கார் பற்றி எரியும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும் 200 மீட்டர் வரை கார் தூக்கி வீசப்பட்டதாகவும், இதில் கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு ரிஷப் பண்ட் வெளியே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் விபத்து நடந்த உடன் முதல் நபராக லாரி ஓட்டுனர் ஒருவர் தான் அங்கு வந்துள்ளார்.
அப்போது முகத்தில் ரத்தத்துடன் இருந்த ரிஷப் பண்ட் நான் கிரிக்கெட் வீரர் என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?