Sports

முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம்.. ஜாம்பவான் பீலே காலமானார்: கண்ணீரில் கால்பந்து உலகம்!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த ஆண்டு பெருங்குடலில் புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் பிறகு அவர் தொடர்ந்து மருத்து கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். மேலும் அவருக்கு கீமோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தேவந்தது. கடந்த மாதம் இறுதியில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே சிசிச்சை பெற்று வந்தார்.

மேலும் அவரது உடலில் மற்ற பாகங்களிலும் புற்று நோய் பரவியதாக மருத்துவர்கள் கூறினர். அதோடு இதயம், சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் தொடர் பீலே சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பீலே உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மகன் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பீலேவின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் மெஸ்ஸி, நெய்மர் உள்ளிட்ட கால்பந்து விளையாட்டு வீரர்களும் ஜாம்பவான் பீலேவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பீலேவின் மரணத்தால் கால்பந்து உலகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

ஜாம்பவான் பீலே 18 ஆண்டுகளாக பல்வேறு விதமான கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார். 1363 போட்டிகளில் விளையாடிய அவர் 1281 கோல்கள் அடித்துள்ளார். மூன்று முறை பிரேசில் நாட்டிற்கு கால்பந்து உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

1977ம் ஆண்டு தனது 40 வயதில் கால்பந்து விளையாட்டிற்கு ஓய்வு கொடுத்தார். பிறகு 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பிரேசில் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பீலே இருந்துள்ளார்.

அதோடு 2012ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியை பீலேதான் தொடக்கிவைத்தார். இது விளையாட்டு உலகமே அவரை கவுரவிக்கும் விதமாக இருந்தது. நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணி கோப்பை வென்றதை அடுத்து 'உலகக் கோப்பைக்குத் தகுதியானவர்தான் லியோனல் மெஸ்ஸி' என பீலே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய 7 கேப்டன்கள்: இந்திய அணியின் பலமா? பலவீனமா?