Sports
பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பேயை மோசமாக கிண்டல் செய்த அர்ஜென்டினா GOAL KEEPER.. ரசிகர்கள் கண்டனம் !
22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.
90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்ற அர்ஜென்டினா வீரர்களும் திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையை வைத்து ரசிகர்களிடையே ஊர்வலம் சென்றனர்.
அப்போது உலககோப்பையில் சிறந்த கோல் கீப்பர் விருது பெற்ற அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் முகம்பதித்த குழந்தை வடிவ பொம்மையை கையில் வைத்து அவரை கேலி செய்தார். இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட அர்ஜென்டினா அணியை வெளியேற்றும் அளவு வெறித்தனமான ஆட்டத்தை ஆடிய எம்பாப்பே ஆடியிருந்தார். ஆனால் அவரை விமர்சித்த எமிலியானோ மார்டினஸூக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்