Sports
"நீங்க எதுக்கு கிரிக்கெட் ஆடுறிங்க? போய் மளிகை கடை வச்சிக்கோங்க" -சீனியர் வீரர்களை விமர்சித்த கபில்தேவ்!
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது.இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா, கோலி, பும்ரா போன்ற வீரர்களுக்கு நிறைய தொடர்களின் பிசிசிஐ ஓய்வு கொடுத்தது. மேலும், தொடர் போட்டிகள் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறியிருந்தனர்.
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய வீரர்களுக்கு இதுபோல ஓய்வு கொடுத்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. உலகக்கோப்பை தோல்வியின்பின்னர் கூட நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணியில் நிலவும் இதுபோன்ற நிலையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "பல சீனியர் வீரர்கள் நாங்கள் ஐபிஎல்லில் விளையாடுகிறோம் எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது என்று கூறுகிறார்கள். நான் அவர்களிடம் நீங்கள் தற்கு இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள் என்று கேட்கிறேன்.
இவ்வளவு அழுத்தத்துடன் உங்களை யார் விளையாட சொல்கிறார்கள்? நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படும். 100 கோடி மக்கள் இருந்து வெறும் 20 பேர் தான் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. நிச்சயம் இது பெருமையான விஷயம். நீங்கள் மக்களிடமிருந்து அவ்வளவு அன்பை பெறுகிறீர்கள். இதனால் இனி அழுத்தம் என்ற வார்த்தையை விட்டுவிட்டு பெருமை கொள்கிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள். ஒருவேளை முடியவில்லை என்றால் நீங்கள் எங்கேயாவது சென்று மளிகை கடை திறங்கள். அங்கு வாழைப்பழம் முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு