Sports
சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரின் White Wash: அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்த இங்கிலாந்து!
17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணியில் வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினர்.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற டக்கட் மற்றும் கிராவ்லியும் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் இது டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து டி20 போட்டி போல பாகிஸ்தான் பந்துவீச்சை ஆரம்பத்தில் இருந்தே நாலாபுறமும் சிதறத்தனர். அதன்பின்னர் வந்த வீரர்களும் அதிரடியாக ரன் குவிக்க இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அப்துல்லா, இமாம் உல் ஹாக், பாபர் அசாம் உள்ளிட்டோர் சதம் அடித்தனர். பின்னர் இரண்டாம் இன்னிங்க்ஸையும் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 35.5 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து அதிரடியாக டிக்ளர் செய்தது.343 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
அதன்பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பின்னர் கராட்சியின் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 304 ரன்களும், இங்கிலாந்து 354 ரன்களும் குவிக்க, பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 170 ரன்களை இலக்காக வைத்து ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்றார் கணக்கில் வென்று பாகிஸ்தான் அணியின் சொந்த மண்ணிலேயே அந்த அணியை white wash செய்துள்ளது. இத்தகைய மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!