Sports
இது டெஸ்ட் போட்டியா ? T20 போட்டியா ? - ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணியை நொறுக்கிய தமிழ்நாடு !
உள்நாட்டு தொடரான ரஞ்சி கோப்பை தொடர் தற்போது நடந்துவருகிறது. இதில் தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆடிய ஹைதராபாத் அணி 395 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தமிழ்நாடு தரப்பில் சந்தீப் 5, விக்னேஷ் 4, சாய்கிஷோர் ஒரு விக்கெட் எடுத்தனர்.
அடுத்து தமிழக அணி களமிறங்கியது. தமிழக அணியின் துவக்க வீரர்களான ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து மளமளவென ரன்களை குவித்தனர். ஜெகதீசன் 95 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சன் 179 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாபா அபராஜித் சதமடிக்க தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 514 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
பின்னர் 115ரன் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணி 258 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 5, எல் விக்னேஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அந்த தருணத்தில் ஆட்டத்தில் 11 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் தமிழ்நாடு அணி வெற்றிபெற 143 ரன் தேவைப்பட்டது.
எனினும் நம்பிக்கையோடு களமிறங்கிய தமிழக அணியின் துவக்க வீரர்களான ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் டி20 பாணியில் அதிரடி ஆட்டம் ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 93 ரன் குவித்த இந்த ஜோடி பிரிந்தது. சாய் சுதர்சன் 20 பந்தில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய தமிழகம் 7 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன் குவித்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் சமனில் முடித்துக்கொள்ளப்பட்டது. ஜெகதீசன் 22 பந்துகளில் 59 ரன் கள் குவித்து ஆட்டமிழக்கால் இருந்தார். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி இறுதிக்கட்டத்தில் நேரத்தை விரயம் செய்தததாக புகார் எழுந்துள்ளது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 1 புள்ளி வழங்கப்பட்டது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!