Sports
தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஆடப்போகும் அடுத்த வீரர் இவர்தான்..21 வயது வீரருக்கு குவியும் பாராட்டு
நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை ஆடினர். அதிலும், இவர்கள் அதிரடியால் தமிழ்நாடு அணி அருணாச்சலபிரதேச அணிக்கு எதிராக உலகசாதனை படைத்தது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சலபிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தமிழ்நாடு அணி சார்பில் களமிறங்கிய தொடக்கவீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் அருணாச்சலபிரதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
ஆட்டம் முழுக்க சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறந்தது. தொடக்கவீரர்கள் இருவரும் அடுத்தடுத்து அதிரடி சதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து இந்த ஜோடி பிரிந்தது. சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள் அடித்து 277 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த அதிரடி காரணமாக தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்தது. இதன்மூலம் முதல் தர 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலகசாதனையை தமிழ்நாடு அணி படைத்தது. இந்த தொடரில் ஜெகதீசன் 5 சதங்களோடு 830 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். அதேபோல மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் 3 சதங்களோடு 610 ரன்கள் குவித்து 3ம் இடம் பிடித்தார்.
இந்த நிலையில், தற்போது நடந்துவரும் ரஞ்சி தொடரின் முதல் போட்டியிலும் இரு வீரர்களும் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளனர். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 395 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க. அடுத்து தமிழக அணி களமிறங்கியது.
துவக்க வீரர்களான ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து மளமளவென ரன்களை குவித்தனர். ஜெகதீசன் 95 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சன் 179 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாபா அபராஜித் சதமடிக்க தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 514 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி சாய் சுதர்சனை தக்கவைத்துள்ள நிலையில், இந்த சீசனில் அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தும் என எதிர்பார்ப்பது எழுந்துள்ளது. மேலும், இந்த திறமை காரணமாக அவர் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் எனவும் விளையாட்டு நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!