Sports
“6வது முறை இறுதி போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.. கடைசி வரை போராடிய குரோஷியா” - மேஜிக் செய்த மெஸ்ஸி !
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றுடன் 16 அணிகள் வெளியேறிய நிலையில், ‘ரவுண்டு ஆப் 16’ மற்றும் காலிறுதியுடன் பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்பட பல முன்னணி அணிகள் வெளியேறிவிட்டன.
நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும், முதல் முறை சாம்பியன் கனவில் குரோஷியா, மொராக்கோ அணிகள் அரையிறுதியில் களம் இறங்கின. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா - குரோஷியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் இருந்தே அர்ஜென்டினா அணிகள் கோல் அடிக்க தீவிரம் காட்டின. 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. மெஸ்சி தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்து கோலை அடித்து அசத்தினார். பின்னர் அடுத்த 4 நிமிடத்தில் அணியின் மற்றொரு வீரர் ஜூலியல் அல்வோரஸ் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு வலுசேர்த்தார். முடிவில் முதல் பாதியில் அர்ஜென்டினா 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் 2வது பாதியில் 69 நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோலை அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். இதனையடுத்து குரோஷியா அணியால் ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் தடுத்ததால், அர்ஜென்டினா 3 - 0 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்து வெற்றிப்பெற்றது. இதன்மூலம் 6வது முறையால் உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு