Sports
"இந்த இரு இந்திய வீரர்களை கண்டு பயந்துவிட்டோம்" -வெற்றிக்கு பின்னர் வங்கதேச கேப்டன் பேச்சு !
இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கே.எல்.ராகுல் மட்டுமே போராடி 73 ரன்கள் குவித்தார். முடிவில் இந்திய அணி 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பின்னர் ஆடிய வங்கதேச அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தோல்வியின் இறுதி நிலையில் இருந்தது. எனினும் கடைசியில் அதிரடியாக ஆடிய மெஹதி ஹாசன் இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்த நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் போட்டி குறித்து கூறுகையில், " இறுதிக்கட்டத்தில் டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மெகதி ஹாசன் விளையாடிய கடைசி ஆறு ஏழு ஓவர்கள் மிகவும் சிறப்பாக அமைந்தது. சகிப் மற்றும் நான் இருவரும் மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதாக ஸ்கோரை சேஸ் செய்து விடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் இருவரும் எங்களிடமிருந்து அப்படியே போட்டியை பறித்துக் கொண்டார்கள். ஆட்டம் எங்களை விட்டு போய்விட்டது என்று நினைத்தபோது கடைசியில் மெகதி ஹாசன் நின்று விளையாடி வெற்றியை பெற்று தந்தார். முதலில் இதை நம்பவே முடியவில்லை. கேப்டன் பொறுப்பேற்று விளையாடியது எத்தகைய மகிழ்ச்சியையும் அழுத்தத்தையும் மாறி மாறி கொடுக்கிறது என்பதை ஒரே போட்டியில் புரிந்து கொண்டேன்." எனக் கூறியுள்ளார்.
இந்த போட்டியில் வங்கதேச அணி நல்ல நிலையில் இருந்தபோது திடீரென சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். ஆனால் இறுதியில் கடைசி விக்கெட்க்கு பார்ட்னர்ஷிப் அமைத்து வந்ததேச அணி அபாரமாக ஆடி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!